பொங்கல் வாழ்த்துக்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல்....
யார் சொன்னது தமிழர் திருநாள் என 
தமிழா! அவ்வளவு சுயநலவாதியா நீ
மகிழ்ச்சி என்பது உனக்கு மட்டுமே சொந்தம் என நினைக்க
உழவுக்கு நன்றி சொல்லும் நாள்
நீ மட்டும் தான் உழவு செய்கிறாயா?
ஞாயிறுக்கு நன்றி சொல்லும் நாள்
அது உனக்கு மட்டும் தான் சொந்தமா என்ன?
உலகே நன்றி சொல்லவேண்டிய நாள்
அனைவரையும் வாழவைக்கும் இயற்கைக்கு - இன்று 
நான் சொல்லிவிட்டேன்

பொங்கல் வாழ்த்துக்கள்

No comments: