பொங்கல் 2017

பொய்த்தது வானம்
காய்ந்தன பயிர்கள்
இழந்தது உழவர்கள் உயிர்
பணம் ஒழிப்பு கொள்கையால்
பரிதவிக்கும் மக்கள்
ஜல்லிக்கட்டுத் தடை
ஏறுதழுவலுக்கு தடை
பழந்தமிழ் கலாச்சாரத்தின் மீது
பண்ணாட்டு ஆதிக்க சக்திகள் தாக்குதல்
இவற்றிற்க்கிடையே,

நம் பண்பாட்டை காக்க
போராடும் தமிழ் மக்கள்
இவர்கள் வாழ்வில் பொங்கட்டும் வளம்
உண்டாகட்டும் மங்களம்.
வாழ்க வளமுடன்.

                    - செங்கழனி ஆறுமுகம்.
                             புதுச்சேரி.

No comments: